முதலில் ராகுல் திருமணம் செய்துகொள்ளட்டும்...பிறகு எங்களை கட்டியணைக்கலாம்; பாஜக எம்.பி.யால் வெடித்தது சர்ச்சை!

 
Published : Jul 27, 2018, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
முதலில் ராகுல் திருமணம் செய்துகொள்ளட்டும்...பிறகு எங்களை கட்டியணைக்கலாம்; பாஜக எம்.பி.யால் வெடித்தது சர்ச்சை!

சுருக்கம்

Rahul Gandhi hug BJP MP Nishikant Dubey

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். ராகுல்காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பிறகு பாஜக எம்.பி.க்களை கட்டிபிடிக்கட்டும் என கூறியுள்ளார். கடந்த வாரம் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. 

அதேபோல் டெல்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த நிகழ்வை சுட்டிகாட்டி பேசிய ராகுல்காந்தி, நான் கட்டிபிடிப்பேன் என நினைத்து என்னை பார்த்ததும் பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி செல்கின்றனர் என்றார். பிரதமர் மோடியையும், பாஜகவையும் காங்கிரஸ் எதிர்க்கும் ஆனால் வெறுக்காது. வெறுப்புடன் இருக்கக்கூடாது என்று மதம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என கூறினார்.

பாஜக எம்.பிக்களை கட்டி பிடித்து விடுவேன் என பயப்படுகிறார்கள் என்ற கருத்திற்கு பாஜக எம்.பிக்கள் பலர் பல்வேறு கருத்துகளை கூறி கூருகின்றனர். 

இந்நிலையில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்து கொண்டு பிறகு எங்களை கட்டிப்பிடிக்கலாம் என்றும், ராகுல் காந்தியால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவரது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள். ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை எனவும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!