மதம், மொழி, ஜாதி.. இந்தியாவை துண்டு துண்டாக சங்க் பரிவார் பிரிக்கிறது - காங்கிரஸ் தலைவர் பரபரப்பு கருத்து

By Raghupati RFirst Published Dec 28, 2022, 5:22 PM IST
Highlights

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டைச் சீர்படுத்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. - காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் என ராகுல் காந்தி திட்டமிட்டு பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

இது பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்தியா தற்போது பிளவுபட்டுள்ளது, அதை சரிசெய்யும் வேலையை காங்கிரஸ் செய்கிறது.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டைச் சீர்படுத்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. முதலில் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலில் கவனம் செலுத்துவோம். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் கடுமையான சவாலாக இருக்க முடியும் என்றும் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த செய்தியில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி கூறியது போல் தேசத்தை ஒன்றிணைப்பதே இந்த பாத யாத்திரையின் நோக்கம். மதம், மொழி, ஜாதி அடிப்படையில் இந்தியாவை துண்டு துண்டாக சங்க் பரிவார் பிரிக்கிறது என்று பாஜகவை தாக்கி பேசியுள்ளார் மணிசங்கர் அய்யர். இதுகுறித்து மணிசங்கர் அய்யரை பாஜக கட்சி கடுமையாக சாடியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, காங்கிரஸ் தலைவரை இந்தக் கருத்துக்கு கடுமையாக சாடியதோடு, 1947 பிரிவினையின் போதுதான் இந்தியா உடைந்தது,காங்கிரஸ் கட்சிக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார். மணிசங்கர் அய்யரின் இந்த கருத்துக்கு பாஜகவினர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் காங்கிரசை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.. AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

click me!