
புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒவ்வொருவரும் யோசனை செய்துகொண்டிருக்கும் வேளையில், வித்தியாசமான திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஸ்பெஷல் வியட்நாம் வேவ்ஸ் என்ற பெயரில் 7 நாள் பயணமாக கொல்கத்தாவிலிருந்து வியட்நாம் நாட்டுக்குச் சென்றுவரும் திட்டத்தை வகுத்துள்ளது.
வரும் 2023 ஜனவரி 9ஆம் தேதி வியட்நாம் பயணம் தொடங்கும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்தப் பயணத்துக்கான டிக்கெட்டை ரயில்வே இணையத்தளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதுதான் என் ஸ்டைல்! ரத்தன் டாடா கூறும் சக்சஸ் டிப்ஸ்
இப்பயணத்தில் இணைந்தால் 9ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து புறப்படும் விமானத்தில் வியட்நாம் நாட்டுக்குச் செல்லலாம். முழுமையாக வியட்நாம் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்கலாம். தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்திய ரயில்வே நிர்வாகம் செய்துகொடுத்துவிடும்.
ஹனிமூன் பயணம் மேற்கொள்பவர்களைக் வரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 3 ஸ்டார் ஹோட்டலில் தங்கி முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியாச் சென்றால் ஒரு நபருக்கு ரூ.1, 02,900/- கட்டணம் செலுத்தவேண்டும். இரண்டு பேர் சேர்ந்து சென்றால் இந்தக் கட்டணம் தலா ரூ.82,000/- ஆகக் குறையும். மூன்று பேர் பயணித்தால் ஒருவருக்கு ரூ.81,000/- மட்டும் செலுத்தினால் போதும்.
குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதாக இருந்தால் ரூ.62,400 முதல் ரூ.66,800 வரை கூடுதலாகச் செலுத்தவேண்டும். இந்த ஹனிமூன் பிளான் தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்துகொள்ள 8595904072 அல்லது 8595938067 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: ஜனவரியில் புதிய அலைக்கு வாய்ப்பு