கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... காங். தலைவர் டி.கே.சிவக்குமார் அளித்த வாக்குறுதி என்ன தெரியுமா?

By Narendran S  |  First Published May 4, 2023, 10:12 PM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், புதிய ஹனுமன் கோயில்களை கட்டுவோம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். 


கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், புதிய ஹனுமன் கோயில்களை கட்டுவோம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது.

இதையும் படிங்க: ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா சர்வே: கர்நாடகா தேர்தல் களம் மாறுகிறதா? பாஜகவுக்கு கைகொடுக்கும் 2 மண்டலங்கள்!!

Latest Videos

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள ஹனுமன் கோயில்களை மேம்படுத்துவோம். பல்வேறு பகுதிகளில் புதிய ஹனுமன் கோயில்கள் கட்டுவதற்கும் எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும்.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்.. ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா கருத்துக்கணிப்பு.. மண்டல வாரியான முடிவுகள் இதோ..

அஞ்சனாத்ரி மலையின் மேம்பாட்டை மேற்பார்வையிடவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்பு வாரியத்தை ஏற்படுத்துவோம். ஹனுமனின் கொள்கைகளை பற்றி இளைஞர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். 

click me!