
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி உள்ளார். துணைத்தலைவராக சோனியாவின் மகன் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார்.
இன்னும் சில தினங்களில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் டில்லிக்கு அழைத்துவரப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிறு வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.