மோடி அரசின் வெள்ளை அறிக்கைக்கு பதிலடியாக கருப்பு அறிக்கையை வெளியிட காங்கிரஸ் முடிவு..

By Ramya s  |  First Published Feb 8, 2024, 10:12 AM IST

பொருளாதார முறைகேடு குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கருப்பு அறிக்கையை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது..


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விமர்சித்து வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் குறைபாடுகளை எடுத்துக்கூறி, கருப்பு அறிக்கையை வெளியிட தயாராகி வருகிறது. 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த 'கருப்பு அறிக்கையை வெளியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாடாரங்கள் தெரிவிக்கின்றன, மத்திய அரசின் மதிப்பீடுகளுக்கு முற்றிலும் மாறான தகவல்களை வழங்கும் என்றும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சி குறித்த தங்களின் பார்வையை வழங்கும் விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

2024 தேர்தலில் பாஜக தலைமையின என்.டி.ஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுமா? சர்வே முடிவுகள் இதோ..

முன்னதாக, நேற்று லோக்சபாவில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, நிதி நிலைக்குழு தலைவர் ஜெயந்த் சின்ஹா, பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ள வெள்ளை அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

மேலும் “ இந்த வெள்ளை அறிக்கை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சி முடிந்த போது, இந்தியாவின் பொருளாதாரப் போராட்டங்கள் மற்றும் நிலைமையை மாற்றியமைக்க தற்போதைய நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும். 2013 ஆம் ஆண்டு UPA ஆட்சியின் போது, உலகளவில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் இந்தியா இருந்தது என்று அவர் வலியுறுத்தினார், இது அந்த நேரத்தில் பொருளாதார சவால்களின் தீவிரத்தை காட்டியது” என்று தெரிவித்தார்.

காணாமல் போய் 22 வருஷம் ஆகிருச்சு... சாமியாராக மாறி தாயிடம் பிச்சை கேட்டு வந்த மகன்!

மத்திய அரசின் வெள்ளை அறிக்கை குறித்து பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அரசாங்கம் எந்த ஆவணங்களையும் சபைக்கு கொண்டு வந்தாலும் அதை சமாளிப்பதற்கு தங்கள் கட்சி தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மேலும். "நரேந்திர மோடிக்கு காங்கிரஸ்போபியா உள்ளது. நாங்கள் போராடத் தயாராக உள்ளோம். அரசாங்கம் 'வெள்ளை அறிக்கை, சிவப்பு அறிக்கை, கருப்பு அறிக்கைஆகியவற்றை கொண்டு வரலாம், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், மெஹுல் சோக்சியின் ஆவணங்களையும் அவையில் சமர்ப்பிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

click me!