தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் யார் வெற்றி பெறக்கூடும் என்று டைம்ஸ் நவ்-மேட்ரைஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த திங்கள்கிழமை , நாடாளுமன்றத்தில் பேசிய போது அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், பாஜக தனித்து 370 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர், “நாட்டின் மனநிலையை என்னால் அளவிட முடியும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களையும், பாஜகவுக்கு குறைந்தபட்சம் 370 இடங்களையும் கைப்பற்றும்” என்று பிரதமர் கூறினார். மேலும் மூன்றாவது ஆட்சி காலம் வெகு தொலைவில் இல்லை என்றும், அதிகபட்சம் 100-125 நாட்கள் எஞ்சியுள்ளன," என்றும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியால் 400 இடங்களை வெல்லுமா?
தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் யார் வெற்றி பெறக்கூடும் என்று டைம்ஸ் நவ்-மேட்ரைஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 366 இடங்களில் வெற்றி பெறும். அதேசமயம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 104 இடங்களையும், மற்ற கட்சிகள் 73 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு விகிதத்தைப் பொறுத்த வரையில், தேசிய ஜனநாயக கூட்டணி 41.8 சதவீத வாக்குகளையும், இந்தியா கூட்டணி 8.6 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற கட்சிகளுக்கு 29.6 சதவீதம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியான கருத்துகக்ணிப்பு முடிவுகள் :
உ.பி
மொத்த இடங்கள் : 80
பாஜக+: 77
இந்தியா கூட்டணி: 3
பகுஜன் சமாஜ்: 0
மற்றவை: 0
உத்தரகாண்ட்
மொத்த தொகுதிகள் : 5
பாஜக: 5
காங்: 0
மற்றவை: 0
மத்தியப் பிரதேசம்
மொத்த இடங்கள் - 29):
பாஜக: 28
காங்: 1
மற்றவை: 0
இமாச்சலப் பிரதேசம்
மொத்த இடங்கள்- 4
பாஜக: 3
காங்: 1
மற்றவை: 0
டெல்லி
மொத்த இடங்கள்: 7
பாஜக: 7
ஆ,ம் ஆத்மி : 0
காங்: 0
மற்றவை: 0
பஞ்சாப்
மொத்த இடங்கள்: 13
ஆம் ஆத்மி : 05
பாஜக: 03
காங்: 03
ஷிரோமனி அகாலி தளம்: 01
மற்றவை: 0
ஹரியானா
மொத்த இடங்கள்: 10
பாஜக: 9
காங்: 1
மற்றவை: 0
ராஜஸ்தான்
மொத்த இடங்கள்: 25
பாஜக: 25
காங்: 0
மற்றவை: 0
குஜராத்
மொத்த இடங்கள்: 26
பாஜக: 26
காங்: 0
ஆம் ஆத்மி : 0
மற்றவை: 0
சத்தீஸ்கர்
மொத்த இடங்கள்: 11
பாஜக: 11
காங்: 0
மற்றவை: 0
பீகார்
மொத்த இடங்கள்: 40
தேசிய ஜனநாயக கூட்டணி : 35
இந்தியா கூட்டணி : 5
மற்றவை: 0
ஜார்கண்ட்
மொத்த இடங்கள்: 14
தேசிய ஜனநாயக கூட்டணி: 13
இந்தியா கூட்டணி: 1
மற்றவை: 0
ஆந்திரா:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்: 19
டிடிபி-ஜன சேனா: 6
ஒடிசா
மொத்த தொகுதிகள் : 21
பாஜக: 11
பிஜு ஜனதா தளம் : 9
தமிழ்நாடு
மொத்த இடங்கள்: 39
பாஜக: 1
இந்தியா கூட்டணி : 36
அதிமுக: 2
மற்றவை: 0
2019 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 37.76 சதவீத வாக்குகளைப் பெற்றது, மேலும் அப்போது 45 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் பெறவில்லை.