
கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்அனைவுரும் காதில் பூ வைத்து வந்திருந்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பாஜக முட்டாளாக்கப் பார்க்கிறது என்பதை சூசகமாகக் கூறும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்திருந்தனர்.
இந்தியாவில் நல்லது நடந்தால் இப்படித்தான் பேசுவாங்க: இடதுசாரிகள் பற்றி ராஜீவ் சந்திரசேகர் கருத்து
கர்நாடக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் –மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், இடைக்கால பட்ஜெட்டாகவே இன்று ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்தது.
முதல்வரும், நிதிஅமைச்சருமான பசவராஜ் பொம்மை இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் மொம்மை தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், “கிவிமேலேஹூவா” என்று அதாவது காதில் பூ வைக்கிறார்கள் என்று சத்தமிட்டனர்.
2018ம் ஆண்டு தேர்தலின்போது பாஜக தேர்தல் வாக்குறுதியாக 600 அளித்தது. அதில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியது. மக்களை ஏமாற்றிவிட்டது எனக் கூறி காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் “ பட்ஜெட்டின்போது அரசு கடந்த ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்த அறிக்கையை வழங்கும், எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பதை அறிவிப்போம்” என கடந்த தேர்தலுக்கு முன்பாக தெரிவித்தார். ஆனால் இதுவரை வெள்ளையறிக்கை வெளியிடவில்லை.
காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சோனியா, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம்?
கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதனால் சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகளை இருக்கும் என எதிர்பார்க்க்பட்டது.
முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் குறித்து கடந்த வாரம் கூறுகையில் “ இது மக்கள் நலன் சார்ந்தபட்ஜெட். ஏழைகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு அதிக ஆதரவு அளிக்கும்வகையில் பட்ஜெட் இருக்கும்.
2023-24 பட்ஜெட் வருவாய் உபரி பட்ஜெட்டாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 6,085 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலில் 30 சதவீதம் வளர்ச்சியை மாநிலம் அடைந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் உரை தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில் “ மக்களை ஏமாற்றும் வகையில் மற்றொரு பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்கிறது. நடப்பு பட்ஜெட்டில் அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.
ஹரியானாவில் எரிந்த நிலையில் ஜீப்பில் இரு சடலங்கள்: ராஜஸ்தான் முதல்வருக்கு விஎச்பி கண்டனம்
இதையடுத்து, சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டு, கூச்சலிட்டு பின்னர் அமைதியாகினர்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாகவே பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசில் ஊழல் அனைத்து மட்டத்திலும் அதிகரித்துவிட்டது. கர்நாடக கட்டுமான ஒப்பந்ததார்கள், கட்டிடப்பணியைத் தொடங்கும் முன்பே பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களுக்கு லஞ்சம் வழங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முதல்வர் பொம்மை அரசு 40% கமிஷன் அரசு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. பேசிஎம் என்ற பிரச்சாரத்தையும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.