பாஜகவில் சேரும் பத்மஜா என் தங்கை அல்ல: முரளீதரன் அதிருப்தி!

By Manikanda Prabu  |  First Published Mar 7, 2024, 1:52 PM IST

பாஜவில் இணையவுள்ள தனது தங்கை பத்மஜா வேணுகோபால் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் முரளீதரன் எம்.பி. அதிருப்தி தெரிவித்துள்ளார்


மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், பாஜகவில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று இணையவுள்ளார். கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) பொதுச் செயலாளராக இருக்கும் பத்மஜா வேணுகோபால், கட்சித் தலைமையால் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், பத்மஜா வேணுகோபால் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அவரது சகோதரர் முரளீதரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகனான கே.முரளீதரன், தற்போது வடகாரா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.

Latest Videos

undefined

பத்மஜா வேணூகோபால் பாஜகவில் இணைவது குறித்து பேசிய முரளீதரன், தனது தங்கையின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பத்மஜா வேணுகோபாலை காங்கிரஸ் புறக்கணிப்பதாக கூறப்படும் தகவலை மறுத்த அவர், கட்சி அவருக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்தே வந்துள்ளது என்றார். பாஜகவில் இணையவுள்ள பத்மஜா வேணுகோபாலை தனது தங்கையாக கருத முடியாது எனவும் அவர் என் தங்கையே இல்லை எனவும் முரளீதரன் வேதனை தெரிவித்துள்ளார்.

பத்மஜா வேணுகோபாலை வெற்றி பெறும் இடங்களிலேயே கட்சி நிறுத்தியுள்ளது. ஆனாலும், அவர் வெற்றி பெறவில்லை என முரளீதரன் சுட்டிக்காட்டினார். ஐக்கிய ஜனநாயக முன்னணி 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முகுந்தாபுரம் மக்களவை தொகுதியில், 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பத்மஜா தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்: பிரதமர் மோடி பங்கேற்பு!

இடது முன்னணி வெற்றி பெறும் வட்டியூர்காவில் நான் போட்டியிட்டு வெற்றி பெறவில்லையா? வடகரா தொகுதியில் நான் வெற்றி பெறவில்லைய? எனவும் முரளீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். பத்மஜா பாஜகவுக்கு செல்வதால் அக்கட்சிக்கு பலன் கிடைக்காது எனவும், முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதியிலும் அக்கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும் எனவும் முரளீதரன் தெரிவித்தார். கட்சியில் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தபோதிலும், நான் பாஜகவில் சேரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பத்மஜா வேணுகோபால் கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திருச்சூர் தொகுதியிலும், கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் முகுந்தபுரம் தொகுதியிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி அண்மையில் பாஜகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த பத்மஜா வேணுகோபால் பாஜகவில் இணைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!