
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்குள்ள பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெறும் 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள 'முழுமையான விவசாய மேம்பாட்டு திட்டத்தை' பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் உட்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் (புனித யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக, பாரம்பரிய விரிவாக்க இயக்கம்) திட்டத்தின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுற்றுலாத் துறை தொடர்பான பல திட்டங்களையும் அவர் தேசத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் படத்தை அச்சுஅசலாக வரைந்த ஓவியர் ஹர்ஷா!
‘உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' மற்றும் 'இந்தியாவுக்கு செல்லுங்கள்' என்னும் உலக அளவிலான பிரச்சாரத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களையும் அவர் அறிவிக்கவுள்ளார்.
இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் புதிதாக அரசுத் தேர்வில் சேரும் சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் பிரதமர் மோடி, பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீநகரை அடைந்த பிரதமர் மோடி, சங்கராச்சாரியார் மலையை பார்வையிட்டார். தொடர்ந்து, பக்ஷி ஸ்டேடியத்திற்கு சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.