காலி பூங்கொத்தை பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் பிரமுகர் கொடுத்த சிரிப்பலையை ஏற்படுத்தும் சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், ஜோதிராதித்ய சிந்தியாவின் கிளர்ச்சியால் பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. எனவே, இந்த முறை மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு இடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை மகிழ்ச்சியூட்டிய சுவாரஸ்ய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலம் இந்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த இணைப்பைப் தனது எக்ஸ் பக்கதில் பகிர்ந்த பிரியங்கா காந்தி, “இந்தூர் மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் நிலமான இது, நீதி, உண்மை மற்றும் நல்லாட்சிக்கு பெயர் பெற்றது. இங்குள்ள மக்கள் ஊழலையும், மோசமான நிர்வாகத்தையும் முடித்து தங்களது பெருமையை மீட்டெடுப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
மராத்தா மகாராணியான அஹில்யாபாய் ஹோல்கர் 18ஆம் நூற்றாண்டில் சுமார் 30 ஆண்டுகள் இந்தூரை ஆட்சி புரிந்தவர். முன்னதாக, இந்த கூட்டத்தின்போது, சால்வைகள் போர்த்தியும், புத்தகங்களை பரிசாக அளித்தும் காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா காந்திக்கு மரியாதை செய்தனர்.
गुलदस्ता घोटाला 😜
गुलदस्ते से गुल गायब हो गया.. दस्ता पकड़ा दिया 😂😂
मध्यप्रदेश के इंदौर में प्रियंका वाड्रा की रैली में एक कांग्रेसी गुलदस्ता देने पहुंचा लेकिन कांग्रेसी खेल हो गया। pic.twitter.com/y7Qmyldp94
அந்த வகையில், மேடைக்கு வந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பிரியங்கா காந்திக்கு பூக்கள் இல்லாத காலி பூங்கொத்து ஒன்றை பரிசாக அளித்தார். இதனை பார்த்த பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டே, அந்த நபரிடம் பூக்கள் எங்கே என்று கேட்டார். ஆனால், அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவர் திருதிருவென விழித்தார். இதனை கண்ட பிரியங்கா காந்தியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் வாய்விட்டு சிரித்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.