congress: சோனியா இல்லாமல் காங்கிரஸ் கொண்டாடிய சுதந்திர தினம்: ஒற்றுமை முக்கியம்- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

By Pothy RajFirst Published Aug 15, 2022, 3:06 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோநா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி சுதந்திரதினத்தை இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடியது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோநா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி சுதந்திரதினத்தை இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடியது.

ஆசாதி கவுரவ் யாத்திரையியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தேவை.. பிரதமர் மோடி..!

நாட்டின் 75-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2-வது முறையாக கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து, சுதந்திரதின விழாவில் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. 

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மிரட்டல்

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மகாத்மா காந்தி நினைவிடம்வரை நடந்த ஆசாதி கவுரவ் யாத்திரையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அம்பிகா சோனி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கற்றனர்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அம்பிகா சோனி, தேசியக் கொடியை ஏற்றினார். இதில் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர். பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், பவன் குமார் பன்சால், மோஷினா கிட்வாய் ஆகியோர் பங்கேற்றனர்.

தேசியக் கொடியை வீட்டில் ஏற்றியாச்சு! மத்திய அரசிடம் சான்றிதழ் வாங்கிட்டிங்களா?எப்படி பெறுவது?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறுகையில் “ இந்தியாவின் சுதந்தினதினத்தில் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்த நாளில் நான் கூற வேண்டிய செய்தி என்பது, சுதந்திரத்தைப் பெறுவதற்காக நம் தேசத்துக்காக இன்னுயிரை நீத்த தியாகிகள், மக்கள், தலைவர்கள் ஆகியோரை நினைவு கூற வேண்டும்.

அவர்கள்தான் சுதந்திரத்துக்கு காரணமானவர்கள். நாம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

click me!