ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!!

Published : Nov 21, 2022, 04:38 PM ISTUpdated : Nov 21, 2022, 06:50 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!!

சுருக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே பேரறிவாளனை கடந்த மே.18 ஆம் தேதி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில் மற்ற 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆறு பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.   

இதையும் படிங்க: நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு

அந்த மனுவில்,  6 பேர் மேல்முறையீடு விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்கவில்லை. இந்த வழக்கில் இடையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விடுவிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. இயற்கை நீதி கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது தவறானதாகும். பேரறிவாளன் உத்தரவை மட்டுமே கொண்டு 6 பேரையும் விடுதலை செய்தது தவறு. பொது ஒழுங்கு, அமைதி, நாட்டின் குற்ற நீதிமுறை ஆகியவற்றில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பான இந்த மனுவில் மத்திய அரசின் வாதத்தை கேட்டிருக்க வேண்டும். 

இதையும் படிங்க: ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!!

வெளிநாட்டவர்கள் விடுதலை தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சாசனம் 7 ஆவது அட்டவணையின்படி வெளிநாட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. மேற்கண்ட வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயாமல் 6 பேரையும் விடுவித்த உத்தரவு மறுஆய்வு செய்ய தகுதியுடையது. எனவே நவம்பர் 11 ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மறு சீராய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!