நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையிக் தற்போது அந்த கமிட்டியின் கூட்டம் ஒன்று இந்திய தலைநகர் டெல்லியில் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் கட்சியில் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கலந்தாலோசித்தனர். இதில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசப்பட்டது.
இன்று அக்டோபர் 9ம் தேதி திங்கள் கிழமை, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உள்பட பல்வேறி விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
இந்த கூட்டம் முடிந்தபிறகு, செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி அவர்கள், இந்திய நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பானது, நாட்டில் உள்ள ஏழைகளின் நலனுக்கான சக்திவாய்ந்த முற்போக்கான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு இருந்த UPA (United Progressive Alliance) அரசு நடைபெற்றபோது ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்கள் இப்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதில் "நான் ஒரு பல்கலைக்களத்திற்கு சென்று மாணவர்களிடம் பேசினாலும் சரி, அல்லது ஒரு டீ கடைக்கு சென்று அந்த டீ கடைக்காரரிடம் பேசும்போதும் சரி அவர்களின் ஜாதி என்ன என்பதை பற்றி நான் பேசமாட்டேன்" என்று கூறியுள்ளார்.
*2009- UPA Govt*
Rahul- I don't ask caste of people
*2023- Modi Govt*
Rahul- I want to know caste of everyone
Rahul Gandhi can't fight Modi on Development, so started cheap caste politics. pic.twitter.com/ObDFD7CBqY
அதுவே இப்பொது மோடி அவர்களின் தலைமையிலான அரசு நடைபெறும்போது "நாடு முழுவதும் கட்டாயம் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கவேண்டும், அது ஏழை எளிய மக்களுக்கு நல்லது" என்பர் அவர் பேசியுள்ளார். இப்படி சாதி குறித்து இரு வேறு விதத்தில் ராகுல் காந்தி பேசியது, காங்கிரஸ் சாதியை ஆயுதமாக கொண்டு நாடகமாடுகிறதா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது என்றே கூறலாம். ட்விட்டர் பக்கத்தில் இது மாபெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.