
தனது கண் அசைவு மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகை பிரியா வாரியார் மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெறும் மலரய பூவி பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் மத உணர்வு புண்படுத்துவதாக கூறி ஏற்கனவே ஐதராபாத் காவல்
நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக படத்தின் டைரக்டர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநில போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய முகபாவனைகள் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் பிரியா வாரியாரியாரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியுள்ளது.
அந்த பாடல் காட்சியில் இடம் பெற்ற பிரியா வாரியாரின் கண்ணசைவுகள், முகபாவனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாடல் மூலம் பிரியா
வாரியரின் புகழ் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதே சமயம் அந்த பாடலில் இடம பெற்றுள்ள வரி, மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீசில், அண்மையில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு அடார் லவ் படத்தில் வரும் மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த பாடலில், புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம் பெற்றுள்ளது.
இந்த வரிகள்தான் இசுலாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த பாடலில் நடித்த பிரியா வாரியார், பாடலை எழுதியவர், இசையமைப்பாளர், பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைரக்டர் உமர் லுலு, நடிகை பிரியா வாரியார் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு எதிராக மகாராஷ்டிர மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மலரய பூவி பாடலில் வரும் வரிகள் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளதாக கூறி டைரக்டர், நடிகை பிரியா வாரியார், மீது புகார் கூறப்பட்டுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள ஒரு அடார் லவ் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்துக்கு சிக்கல் அதிகமாகிக் கொண்டே போகிறது.