
ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர் காந்தக்கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியார். மலையாள சேனலான கைரலி டிவி கடந்த ஆண்டு நடத்திய கோல்டன் பியூட்டி அழகி போட்டியில் பிரியா பிரகாஷ் வாரியர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த அழகி போட்டியின் போதே தனக்கு சினிமாவில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கைரலி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில், ஒரு அடார் லவ் பட பாடல் ஹிட் ஆகும் என்று எனக்கு தெரியும்.ஆனால் அது தேசிய அளவில் ஹிட் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாடலை கேட்டதும் பிடித்தது. பாட்டு ஹிட் ஆகும் என்று தெரியும். வீடியோ ஹிட் ஆகும் என தெரியாது. கண்ணால் ஏதாவது மேனரிசம் காட்டும்படி இயக்குனர் என்னிடம் கூறினார்.
இயக்குனர் சொன்னதும் புருவத்தை உயர்த்தி கண்ணடித்து காண்பித்தேன். அதை பார்த்து இயக்குனர் அந்த நடிகரையும் கண்ணால் நடிக்க வைத்தார். படத்தில் சைடு ரோலில் நடிக்கத்தான் என்னை முதலில் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் நான் கண்ணால் பேசியதை பார்த்து இயக்குனர் எனக்காக கதையை மாற்றி என்னை மெயின் ரோலில் நடிக்க வைத்தார் என்று தனது அனுபவம் குறித்து கூறியிருந்தார்.
ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்ய மலராய பாடலில் நடிகை பிரியாவின் முகபாவனைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி, ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். அது மட்டுமல்லாது தேசிய ஊடகங்கள் அவரை பேட்டியெடுத்து இன்னும் பிரபலப்படுத்தி விட்டன.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர், நடிகை பிரியா வாரியாரை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், நான் நடிக்கும்போது நீ நடிக்க வரவில்லையே... ஏன் என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
ரிஷிகபூரின் டுவிட்டர் பதிவில், ப்ரியா வாரியார். இந்த பெண்ணுக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்தக்கூடிய, குறும்புத்தனமான அதே வேளையில் தன்மையான அப்பாவித்தனமான முகபாவனைகள்.
என் இனிய ப்ரியா, உனது வயதையொத்த மற்றவர்களுக்கு கண்டிப்பாக பெரிய போட்டியாக இருக்கப்போகிறாய்.