கல்லூரி மாணவி முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட காமுகன்! ஓடும் பேருந்தில் நிகழ்ந்த கொடுமை!

 
Published : Feb 18, 2018, 02:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
கல்லூரி மாணவி முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட காமுகன்! ஓடும் பேருந்தில் நிகழ்ந்த கொடுமை!

சுருக்கம்

Indecent act of man in a running bus

கல்லூரி மாணவி அருகே இருந்த ஆண் ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அந்த நபரின் அருவருக்கத்தக்க நடத்தையால், அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மாணவி அளித்த புகாரில், கடந்த 7 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நான் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது அருகே ஒரு ஆண் அமர்ந்திருந்தார். நான், புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென அந்த நபர், அவரது முழங்கையால் எனது இடுப்புப் பகுதியில்
உரசினார். நான் நகர்ந்து உட்கார்ந்துக் கொண்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் அந்த நபர் மீண்டும் என்னை உரசியபோது அவரை உற்று கவனித்தேன். அப்போதுதான் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டிருந்தது எனக்கு தெரிந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நாள், எனது செல்போனில் அவரைப் படம் பிடித்தேன். அதன் பிறகு அவரை நோக்கி குரல் எழுப்பினேன். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளவில்லை. சத்தமாக அவர் செய்வது குறித்து கூச்சலிட்டேன். ஆனால், பேருந்தில் உடன் வந்த பயணிகள் யாரும் எனக்கு உதவ
முன்வரவில்லை. அந்த நபரை நான், ஆவேசமாக திட்டினேன். இதையடுத்து, அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கிச் சென்று விட்டார்.

வீடு திரும்பிய பின், இது குறித்து பெற்றோரிடம் கூறினேன். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்க தயங்கினர். ஆனால், என்னால் அந்த அருவருப்பு சம்பவத்தை தாங்கிக்கொள்ளவில்லை. 

அதனால் எனது டுவிட்டர் பக்கத்தில் அந்த போட்டோவை அப்லோட் செய்து அதை டெல்லி போலீஸ், டெல்லி மகளிர் ஆணைய தலைவர், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட் சிலருக்கு அனுப்பி வைத்தேன். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10 ஆம் தேதி, வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தேன் என்று பதிவிட்டுள்ளார். 

கல்லூரி மாணவியின் புகாரை பெற்றுக் கொண்ட டெல்லி போலீசார், அந்த நபரை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபர் குறித்த தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்