பொறியியல் மாணவனுக்கு சேர்ந்த பரிதாபம்.. 11 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு..

By Thanalakshmi V  |  First Published Oct 3, 2022, 5:58 PM IST

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த குஷாக்ரா மிஸ்ரா என்பவர் ஜெய்பூர் மணிபால் பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
 


உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த குஷாக்ரா மிஸ்ரா என்பவர் ஜெய்பூர் மணிபால் பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இவர் 11 வது மாடியிலிருந்து தரை தளத்திற்கு  செல்வதற்காக லிப்டை பயன்படுத்தியுள்ளார்.அப்போது கதவுகள் திறந்ததும் உள்ளே சென்ற அவர், அதில் லிப்ட் எதுமில்லாமல் 11 வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.  

Tap to resize

Latest Videos

மேலும் படிப்பு:விடுமுறையில் சிறப்பு வகுப்பா ? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை !

பின்னர் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடந்த சில தினங்களாக லிப்ட் பழுதாகி இருந்ததாகவும் பலமுறை முறையிட்டும்  உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் படிப்பு:குண்டு வீச மாட்டோம்.. பாட்டிலில் பெட்ரோல் வேண்டும்.. விவசாயிகள் போராட்டம்

இதனிடையே மாணவனின் மரணத்திற்கு காரணமான உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடியிருப்புவாசிகள் ஜெய்ப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். 

click me!