நாட்டில் 200க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது; நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பல்வேறு நவீன வசதிகளுடன் மறுசீரமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் பயணிகளின் ஓய்வறைகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுப்போக்கு இடங்கள் உள்ளிடங்கிய உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
undefined
மேலும் படிக்க:ஹனுமான் வேடத்தில் நாடகத்தில் நடிக்கும் போதே இறந்த துயர சம்பவம் - வைரல் வீடியோ !
அந்த வகையில் 47 நிலையங்களில் டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்து, 32 ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதியான பயணங்களை கருத்தில் கொண்டு, இந்தியன் ரயில்வே மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
ரயில் நிலையங்களின் நடைமேடை பகுதியானது பிராந்திய பொருட்களை விற்பனை செய்யும் இடமாக மாற்றப்படும். நாட்டில் எதிர்காலத்தில் 400 வந்தே பாரத் ரயில்கள் இருக்கும். அதில் 100 ரயில்கள் மாரத்வாடாவின் லுத்திரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் நாட்டில் அனைத்து பகுதிகளும் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே மூலம் இணைப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாரத்வாடாவில் சில பகுதிகளும் அதில் இணைக்கப்படவுள்ளன என்று பேசினார்.
மேலும் படிக்க:மீண்டும் அதிர்ச்சி !! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி