மீண்டும் அதிர்ச்சி !! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி

Published : Oct 03, 2022, 03:37 PM IST
மீண்டும் அதிர்ச்சி !! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி

சுருக்கம்

மும்பையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

மும்பையில் பல்கார் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இரவில் தூங்க போவதற்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை ஜார்ஜரில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் திடீரென்று பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அருகில் படித்து உறங்கிக் கொண்டிருந்த  7 வயது சிறுவன் 70 % தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்தனர். 

மேலும் படிக்க:வங்கி வாங்கிய கடனுக்காக சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி.. நடந்தது என்ன..?

அதன்படி நள்ளிரவு 2. 30 மணியளவில் பேட்டரிக்கு ஜார்ஜ் போட்டு சென்றதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். இதனால் அதிக வெப்பம் காரணமாக பேட்டரி வெடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக நாட்டில் பல்வேறு பகுதியில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரிகள் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

மேலும் படிக்க:குரோம்பேட்டையில் தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு மர்ம மரணம்; காவல்துறை விசாரணை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!