"13 கொக்கைன் பாக்கெட்டுகள், ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடையுள்ளவை. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கூறினார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகருக்கு அருகில் உள்ள சிற்றோடை பகுதியில் இருந்து இன்று அதிகாலை 13 கொக்கைன் பாக்கெட்டுகள் மீட்கப்பட்டதாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருக்க கடற்பகுதியில் இந்தப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்துள்ளனர் என்று கட்ச்-கிழக்கு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் கூறியுள்ளார். எட்டு மாதங்களில் இதே ஓடை பகுதியில் இரண்டாவது முறையாக பெரிய அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
"பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழுவின் கூட்டுக் குழு காந்திதாம் நகருக்கு அருகிலுள்ள மிதி ரோஹர் கிராமத்தில் இருந்து 13 கொக்கைன் பாக்கெட்டுகளை மீட்டுள்ளன. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.130 கோடி" என்று அவர் கூறினார்.
மிகக் குறைந்த வயதில் எம்.பி.யான இளம் பெண்கள்! வெறும் 25 வயதில் மக்கள் மனதை வென்று சாதனை!
இப்போது கண்டெடுத்திருக்கும் கொக்கைன் பாக்கெட்டுகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் இதே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பாக்கெட்டுகள் போலவே உள்ளன என்றும் பாக்மர் கூறியுள்ளனர்.
"13 கொக்கைன் பாக்கெட்டுகள், ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடையுள்ளவை. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் போலீசார், இதே பகுதியில் இருந்து, 80 கொக்கைன் பாக்கெட்டுகளை மீட்டனர். ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்டது. சர்வதேச சந்தையில் அதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.800 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
எல்லாம் அம்மாவுக்காக... மரக்கன்று நட்டு போட்டோ எடுங்க! புது ஐடியாவுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மோடி!