உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மோடி ஒரு மரக்கன்றை நட்டிருக்கிறாராம். அப்போது எடுத்த போட்டோ ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து #Plant4Mother என்ற ஹேஷ்டேகை அறிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வரும் 3வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், அம்மாவுக்காக மரக்கன்று நடுங்கள் என்று புதிய ஐடியாவுடன் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
2024 பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமராக மோடி ஜூன் 8ஆம் தேதி பதவியேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ஆட்சி அமைப்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
பதவியேற்ற உடனே மோடி ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் அதற்காக வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்துவருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ட்விட்டரில் மோடி ஒரு படத்தைப் பதிவிட்டு, அதேபோல அனைவரும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! பாஜக கூட்டணி ஆட்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள்!
Today, on World Environment Day, delight to start a campaign, . I call upon everyone, in India and around the world, to plant a tree in the coming days as a tribute to your mother. Do share a picture of you doing so using or . pic.twitter.com/dfviUtLbTZ
— Narendra Modi (@narendramodi)உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மோடி ஒரு மரக்கன்றை நட்டிருக்கிறாராம். அப்போது எடுத்த போட்டோ ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து #Plant4Mother என்ற ஹேஷ்டேகை அறிவித்துள்ளார். அனைவரும் தங்கள் தாயைப் போற்றும் விதமாக ஒரு மரக்கன்றை நட்டு, இதேபோல போட்டோ எடுத்து #Plant4Mother அல்லது #एक_पेड़_माँ_के_नाम என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட வேண்டும் என்று தன் பதிவில் கூறியிருக்கிறார்.
543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் பாஜக 240 இடங்களில் வெற்றி அடைந்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, தனது ராஜினாமா கடிதத்தையும் 17வது மத்திய அமைச்சரவையைக் கலைப்பதற்கான தீர்மானத்தையும் அளித்தார். அதை குடியரசுத் தலைவரும் உடனே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
மிகக் குறைந்த வயதில் எம்.பி.யான இளம் பெண்கள்! வெறும் 25 வயதில் மக்கள் மனதை வென்று சாதனை!