இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் குறைந்த வயதுடைய எம்.பி.க்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் சஞ்சனா ஜாதவ். ராஜஸ்தானின் பரத்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சனா ஜாதவின் வயது 25. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.
undefined
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி: ஜூன் 8இல் மீண்டும் பதவியேற்பு!
சஞ்சனா ஜாதவ் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
** 25 வயதான சஞ்சனா ஜாதவ், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். 18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.
** மகாராஜா சூரஜ்மல் பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை கடந்த 2019ஆம் ஆண்டில் முடித்தார்.
** சஞ்சனா ஜாதவின் கணவர் ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் ஆக உள்ளார். அவரது பெயர் கப்டன் சிங். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
** தேர்தல் ஆணையத்தில் சஞ்சனா ஜாதவ் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.23 லட்சம். அவருக்கு ரூ.7 லட்சம் கடன் உள்ளது.
** 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், சஞ்சனா ஜாதவ் பாஜகவின் ரமேஷ் கேடியிடம் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்
** ஆனால், அந்த தோல்வியை துவண்டு போகாமல் மக்களவைத் தேர்தலின்போது தீவிரமாக பிரசாரம் செய்தார். இதன் மூலம், வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்த்ததுடன், இளம் எம்.பி.யாக மக்களவைக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 இடங்களில் 14 இடங்களை பாஜக கைப்பற்றியது. 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) மற்றும் பாரதிய அகில் காங்கிரஸ் (பிஏசி) ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.