முடிந்தால் என்னுடைய அரசை கவிழ்த்து காட்டுங்கள்... பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பகிரங்க சவால்..!

By vinoth kumarFirst Published Jul 27, 2020, 2:10 PM IST
Highlights

மகாராஷ்டிரா கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து காட்டுங்கள் என பாஜகவுக்கு அம்மாநில முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து காட்டுங்கள் என பாஜகவுக்கு அம்மாநில முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது 60-வது பிறந்தநாளையொட்டி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில்;- மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையானவை. 3 கட்சிகளின் அனுபவத்தில் இந்த அரசு சிறப்பாகவும், செம்மையாகவும் நடந்து கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலம் எதிர்க்கட்சிகளின் கைகளில் இல்லை.

ஏழைகளின் வாகனமாக மூன்று சக்கரம் ஆட்டோ போன்றது எனது அரசு. அதனை கட்டுப்பாட்டுடன் ஓட்டும் கைபிடி என்னிடம் உள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத  காங்கிரஸ் கட்சிகள் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்துள்ளன. தேவைப்படும் போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி விடுகிறேன். எங்களுக்குள் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. அரசும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், எதிர்க்கட்சியான பாஜக இந்த அரசை கவிழ்ப்பதில் இன்பம் கிடைத்தால் இப்போதே கவிழ்த்து விடுங்கள். ஊகிக்கப்படுவது போல் செப்டம்பர், அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சிலர் ஆக்கப்பூர்வமான பணியை செய்வதில் இன்பம் அடைகிறார்கள். ஆனால் சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

click me!