கொஞ்சம் கூட கொலைவெறி அடங்காதா கொடூர கொரோனா... ஒரே நாளில் 50,000 பேருக்கு தொற்று.. அலறும் மக்கள்..!

By vinoth kumarFirst Published Jul 27, 2020, 11:59 AM IST
Highlights

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,35,453ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,35,453ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,453ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 708 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும்  32,771ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,17,568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,85,114ஆக உள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 3,75,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,13,238ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,656ஆக உயர்ந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2,13,723 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,494 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,30,606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,827 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் ஆந்திராவும், 5வது இடத்தில் கர்நாடகவும் உள்ளது.

click me!