ஈத் பண்டிகையின் போது ஏற்பட்ட இந்து - முஸ்லீம் மதக்கலவரம்.. இணைய சேவை துண்டிப்பு.! அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati RFirst Published May 3, 2022, 10:58 AM IST
Highlights

ஈத் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த மோதல்களால்  இணையம் முடக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நேற்று திங்கள்கிழமை இரவு, ஈத் பண்டிகையை முன்னிட்டு, ஜலோரி கேட் பகுதியில் கொடிகளை உயர்த்துவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், மக்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க ஜோத்பூரில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் ஈத் நமாஸ் போலீஸ் பாதுகாப்பில் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜோத்பூரில் கடந்த மூன்று நாள் பரசுராமர் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. மேலும் இரு சமூகத்தினரும் ஏற்றிய மதக் கொடிகள் ஒரு பெரிய வாதத்திற்கு வழிவகுத்து இருக்கிறது. இது பின்னர் மோதலாக மாறியது.

வன்முறை கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் உள்ளூர் போலீஸ் சாவடி மீதும் தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலையில் நடந்த கல்வீச்சு தாக்குதலில் குறைந்தது நான்கு போலீசார் காயமடைந்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. கல் வீசியதில் நான்கு போலீசார் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

ஜோத்பூரைச் சேர்ந்த மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். “ஜோத்பூர், மார்வாரின் அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் அதே வேளையில், அமைதியைப் பேணவும், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க ஒத்துழைக்கவும் அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இந்த கலவர சம்பவம் அனைத்து தரப்பிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Gold Rate Today : அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்க விலை..அடேங்கப்பா.! இவ்வளவு தானா ?

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

click me!