#UnmaskingChina:அடேங்கப்பா.. 3 மாதங்களில் சீன மொபைல் விற்பனை 81% ஆக உயர்வு..!

By vinoth kumarFirst Published Jun 24, 2020, 10:47 AM IST
Highlights

சீனாவுக்கு எதிரான உணர்வுகள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையிலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறப்பதாக புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. 

சீனாவுக்கு எதிரான உணர்வுகள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையிலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறப்பதாக புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. 

ஜூன் 15ஆம் தேதியன்று எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவும், சீனாவும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, நாட்டில் சீனாவுக்கு எதிரான மனநிலை பரவலாகியுள்ளது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமெனவும், இந்திய பொருட்களை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் பலதரப்புகளில் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, இந்திய சந்தையில் சீனாவின் கரம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்திய மின்னணு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டில் ரூ.1.4 லட்சம் கோடிக்கு சீன தயாரிப்புகள் விற்பனையாகியுள்ளன. ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், லேப்டாப்கள், பிராண்டட் பொருட்கள், வாட்ச் என பல்வேறு சீன தயாரிப்புகள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்நிலையில், இந்திய மொபைல் போன் விற்பனையில் கடந்த ஆண்டு 71 சதவீதமாக இருந்த சீனாவின் பங்கு கடந்த 3 மாதங்களில் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

சீன மொபைல்களின் ஆதிக்கத்தால் இந்திய பிராண்டுகளான கார்பன், லாவா, மைக்ரோமேக்ஸ் போன்றவைகளும், தென்கொரியாவின் சாம்சங்கும் விற்பனையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சீனாவுக்கு எதிரான உணர்வுகளை வைத்துக்கொண்டு இந்திய சந்தையில் அதன் ஆதிக்கத்தை நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியாது என்றும் புதிய தொழில் கொள்கைகளை வகுத்து 2 அல்லது 3 ஆண்டுகளில் அதற்கான மாற்று வழியை கண்டுபிடிக்கும் வரை சீன  எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கவதை தவிர வேறு வழியில்லை என்றும் துறைச்சார்ந்த வல்லூநர்கள் தெரிவிக்கின்றனர். 

click me!