
உலகிலேயே கொரோனா மரணங்கள் இந்தியாவில்தான் குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவால் 93.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.79 லட்சமாக உள்ளது. உலகிலேயே அமெரிக்காவில் அதிகபட்சமாக 1.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.56 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 14,483 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 1 முதல் நேற்று வரை 2.49 பேர் கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் உலகில் கொரோனா தொற்று மரணங்கள் குறித்து உலக சுகாதார நிறுமனத்தின் அறிக்கைபடி, உலகிலேயே கொரோனா மரணங்கள் மிகவும் குறைவான நாடு இந்தியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல உலக அளவில் லட்சம் பேரி இறப்பு விகிதம் 6.04 பேராக உள்ளது. இது இங்கிலாந்தில் 60.60 ஆகவும், இத்தாலியில் 57.19 ஆகவும், அமெரிக்காவில் 36.30 ஆகவும், ஜெர்மனியில் 27.32 ஆகவும், பிரேசிலில் 23.68 ஆகவும், கனடாவில் 22.48 ஆகவும், ஈரானில் 11.53 ஆகாவும், ரஷ்யாவில் 5.62 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இன்றுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 56.39 சதவீதமாக அதிகரித்துள்ளது.