கேரளாவில் பிராய்லர் கோழியின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு கிலோ ரூ.160 ஆக இருந்த விலை, இப்போது ரூ.100 ஆகக் குறைந்துள்ளது.
கேரளாவில் பிராய்லர் கோழியின் விலை சமீபகாலமாக வெகுவாக குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், கிலோவுக்கு, 160 ரூபாயாக இருந்த விலை, தற்போது, 100 ரூபாயாக குறைந்துள்ளது.
உள்ளூர் கோழி உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி அதிகரித்ததே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் விலை தொடர்ந்து குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
முன்னதாக, பண்ணை கோழி விலை குறைந்தாலும், சில்லறை வியாபாரிகள் விலையை குறைக்காததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், அடிமாலியில் சில சில்லறை வியாபாரிகள் விலையை குறைத்து, கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யத் தொடங்கினர். சில சூப்பர் மார்க்கெட்களில் கிலோ ரூ.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தக் கடுமையான விலை வீழ்ச்சி, கோழிப்பண்ணை வியாபாரிகளை பாதித்துள்ளது. சமீபகாலத்தில் இல்லாத வகையில், முகவர்கள், பண்ணைகளில் இருந்து, ஒரு கிலோ 65 ரூபாய்க்கு கோழிகளை வாங்குகின்றனர். பண்ணைகளில் கோழிகள் அதிக அளவில் இருப்பதால் இந்த விலையும் குறைந்துள்ளது.
இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!
கோழிகளை நீண்ட நேரம் வைத்திருப்பது தீவனச் செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். அதிகளவில் கோழிகள் வளர்க்கப்பட்டு பண்ணைகளில் குவிந்து கிடப்பதும் விலை குறைய காரணமாகக் கூறப்படுகிறது. மழைக்காலம் கோழி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், அவற்றின் எடை அதிகரிக்கும். ஓணம் பண்டிகையை ஒட்டி கறிக்கோழியின் விலை மீண்டும் உயரும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.
மூணாறு உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் அதிக அளவில் கோழிக்கறி கடைகள் இயங்கி வருகின்றன.ஆனால் கடந்த இரு வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் கோழிக்கறி விற்பனை 50% குறைந்துள்ளது. முன்பு தினமும் 300 முதல் 400 கிலோ வரை கோழிக்கறி கொள்முதல் செய்யப்பட்ட பெரிய ஹோட்டல்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.
வயநாடு பேரழிவைத் தொடர்ந்து, இடுக்கிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்துள்ளது. கேரளாவில் சிறிய மற்றும் பெரிய பண்ணைகள் அதிகரித்திருப்பதும் விலை சரிவுக்குக் காரணமாக உள்ளது.
பிரசவத்துக்கு வந்த கர்ப்பணியின் வயிற்றில் துண்டை வைத்துத் தைத்த டாக்டர்கள்!