உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த மக்களை வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி தாக்குதல் நடத்திய நடபர்கள் மீது போலீஸ் வழக்கு.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் வீரியம் அடைந்து ஆளும் கட்சிக்கு எதிரான வன்முறையாக மாறியது. மாணவர்கள், பொதுமக்களின் போராட்டத்தால் அந்நாட்டு அதிபர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேறினார். தற்போது அங்கு இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது.
2 ஆண்டுகளாக குழந்தை இல்லை; உறவினர்களின் நச்சரிப்பால் தம்பதி விபரீத முடிவு?
இதனிடையே அந்நாட்டில் சிறுபான்மையினராகக் கருதப்படும் இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்றும், சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்கள், அவர்களனி் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்றும் இணையத்தில் வீடியோகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்ததி வருகின்றன. இதன் விளைவாக வங்கதேசத்தில் இருந்து அதிகப்படியான மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முனைப்பில் நாட்டு எல்லையில் குவிந்து வருகின்றனர். இதனால் இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
"நீ பாகிஸ்தானி... " பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட உபர் கார் டிரைவர்! வைரல் வீடியோ!
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், காசிபாத் ரயில் நிலையம் அருகில் டெண்ட் அமைத்து தங்கியிருந்த இஸ்லாமியர்கள் மீது இந்து ரக்ஷா தல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீங்கள் வங்கதேசிகள், இங்கு ஏன் தங்கி உள்ளீர்கள் எனக்கூறி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் தொடர்பான புகைப்படம், வீடியோகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வைரலான நிலையில் தாக்குதல் நடத்திய 20 பேர் மீது மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.