Vande Bharat Express: ;சென்னையிலிருந்து 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்: எங்கு, எப்போது தொடக்கம்?

By Pothy Raj  |  First Published Oct 14, 2022, 2:05 PM IST

சென்னையை மையமாக வைத்து நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தை மையமாக வைத்து நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-பெங்களூரு-மைசூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் நவம்பர் 10ம் தேதி இயக்கப்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

காந்திநகர்-மும்பை : 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!!

பிரதமர் மோடி சமீபத்தில் 3வது மற்றும் 4வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். குஜராத்தில் காந்தி நகர் முதல் மும்பை இடையே 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், இமாச்சலப்பிரதேசத்தின் உனா முதல் டெல்லி வரை 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி கடந்த வாரத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் டெல்லி மற்றும் சண்டிகர் இடையிலான தொலைவு 3மணிநேரமாகக் குறைகிறது. உனா முதல் டெல்லி இடையிலான பயண நேரம் 2மணிநேரம் குறைகிறது. புதன்கிழமை தவிர வாரத்துக்கு 6 நாட்கள் அம்ப் அனாதுரா முதல் டெல்லி வரை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அம்பாலா, சண்டிகர், அனந்தபுர் சாஹிப், உனாவில் நின்று செல்லும்.

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் 2.0 ரயில்கள் முன்பு இருந்த ரயிலை விட மேம்படுத்தப்பட்டவை. குறைவான நேரத்தில் அதிகமான வேகத்தை எட்டும் வகையில் வந்தே பாரத் ரயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ரயில்கள் மோதுவதை தவிர்க்கும் தொழில்நுட்பமான டிசிஏஎஸ் முறை அதாவது கவாச் முறைய இதில் செயல்படுத்தப்படுகிறது. திடீரென ஏதாவது கோளாறு ஏற்பட்டால், 3 மணிநேரம் வரை பெட்டிகளில் மின்சாரம் கிடைக்கும் வகையில் பேக்அப் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்: அதிவேக பார்சல் சர்வீஸ் விரைவில் தொடக்கம்

ரயிலில் உள்புறமும், வெளிப்புறமும் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. பெட்டியில் உள்ள உதவியாளரை, பாதுகாப்பாளரை பயணிகள் உதவிக்கு அழைக்கும் வகையில் ஆட்டோமேட்டிங் வாய்ஸ் ரெக்கார்டிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதல் சூப்பர் பாஸ்ட் பார்சல் சேவையாக, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலையும் இயக்க ரயில்வேஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

click me!