கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து - சென்னையை சேர்ந்த ஒரே குடும்பம் பலி.! வைரல் வீடியோ

By Raghupati RFirst Published Oct 18, 2022, 3:55 PM IST
Highlights

உத்தராகண்ட் ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து முதல்வரின் சிறப்பு முதன்மைச் செயலாளர் அபினவ் குமார் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலம் ஃபாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தார். கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கருட் சட்டி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது.

இதையும் படிங்க..ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா.. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் உக்ரைன் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

விபத்து நேரிட்ட செய்தி அறிந்த, நிர்வாகக் குழு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக புறப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது. பனிமூட்டம் மற்றும் மோசமான புலப்பாடு தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்டது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?

முதற்கட்ட தகவல்களின்படி, Bell 407 ஹெலிகாப்டர் VT-RPN மோசமான வானிலை காரணமாக கேதார்நாத்தில் இருந்து குப்தகாஷி செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்களில் மூவர் சென்னையைச் சேர்ந்தவர்கள். பிரேம்குமார், சுஜாதா, கலா என்பதும், அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Six people died in the helicopter crash in Kedarnath Phata, Uttarakhand. 🙏 pic.twitter.com/IhGP8Zm8na

— ɅMɅN DUВΞY (@imAmanDubey)

இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

click me!