Kedarnath Helicopter Crash:உத்தரகாண்டில் சோகம்கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது: 6 பேர் பலி

By Pothy Raj  |  First Published Oct 18, 2022, 1:11 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்கு இன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் 6 பேர் பலியானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்கு இன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் 6 பேர் பலியானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த விபத்துக் குறித்து உத்தரகாண்ட் முதல்வரின் சிறப்பு முதன்மைச் செயலர் அபினவ் குமார் கூறுகையில் “ பட்டா குப்த்காசியிலிருந்து  இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று 7 பக்தர்களுடன் கேதார்நாத்துக்கு புறப்பட்டது.

குஜராத் காந்திநகரில் நாளை பாதுகாப்பு துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஆனால் சாட்டி வனப்பகுதியில் பறந்தபோது, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது அப்போது தீப்பிளம்புகள் வந்ததாக அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை, அதிகமான மஞ்சுமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம். 

பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு: அனுமதி கொடுத்த உள்துறை அமைச்சகம்

 

Six people died in the helicopter crash in Kedarnath Phata, Uttarakhand. 🙏 pic.twitter.com/IhGP8Zm8na

— ɅMɅN DUВΞY (@imAmanDubey)

இந்த விபத்து கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2.கி.மீ தொலைவில் நடந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப்படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்து துறையின் தகவலின்படி, “ முதல்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பெல் 407 விடி-ஆர்பிஎன் வகையாகும். டெல்லியைச் சேர்ந்த பட்டியலிடப்படாத உரிமம் பெற்ற தனியார் நிறுவனத்துடையது. ஆர்யன் விமானப் போக்குவரத்து நிறுவனம் என்றபெயரில் இயங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 41 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டனர்: ஐ.நா. அறிக்கை

 ஹெலிகாப்டர் புறப்பட்டு பறந்தபோது கேதார்நாத் அருகே 2 கி.மீ தொலைவில் வந்தபோது, கருட் சாத்தி வனப்பகுதியில் வந்தபோது ஹெலிகாப்டரின் பின்பகுதியில் திடீரென தீப்பிளம்புகள் உருவாகியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 

விபத்துஎவ்வாறு நடந்தது, இயந்திரக் கோளாறா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரியவரும். விமானத்தில் 2 விமானிகள் உள்ளிட்ட 7 பேர் பயணித்துள்ளனர். அனைவருமே உயிரிழந்திருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது” எனத் தெரிவித்தனர்

 

click me!