தோசைக் கல்லை சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தப்படும் வீடியோவை பகிர்ந்து சுகாதாரம் பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இட்லிக்கு ஒருவகை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், தோசைக்கும் அதைவிட அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தோசை கண்டுபிடித்த மனிதன் ஒருவித ரசனை கொண்டவனாகவே இருக்க முடியும். குழந்தைகளை ஈர்க்கும் தோசை சார்ந்த பாடல்கள் உள்ளன. இன்றைக்கும் மதுரையில் உள்ள பல்வேறு கடைகள் தோசைக்கு பிரபலம். பல வகையான தோசைகளை சுட்டுத் தள்ளி புகழ் பெற்றவை அவை. தோசைக்கு தொட்டுக்க சாம்பார், பல வகையான சட்னி, பொடி உள்ளிட்டவைகள் போக, தோசைகளிலேயே விதவிதமான தோசைகள் மதுரையில் கிடைக்கும்.
மதுரை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பிற ஊர்களிலும் தோசைக்கென்றே பிரத்யேக கடைகள் உண்டு. இப்படிப்படிப்பட்ட தோசையை ஹோட்டலில் சுடும் வீடியோவை எடுத்து அதனை வைரலாக்கி கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
undefined
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ல ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபல ஹோட்டலில், சமையற் கலைஞர் ஒருவர் தோசை சுடும் வீடியோதான் வைரலாகி வருகிறது. மிக உயர் தொழில்நுட்பம் கொண்ட தோசை என்ற தலைப்பில் வைரலாகும் அந்த வீடியோவில், மேலிருந்து ஒரு டியூப் மூலம் தோசைக் கல்லில் தண்ணீர் விடும் சமையலர், பின்னர் துடைப்பத்தை கொண்டு தோசை கல்லை சுத்தம் செய்கிறார். அதன்பின்னர் தோசை மாவை கல்லில் வட்ட வடிவமாக ஊற்றும் அவர், அதன்மேல் பாக்கெட் மூலம் ஏராளமான நெய்யை விடுகிறார். இதையடுத்து, மசால் தோசைக்கு தேவையான உருளைக்கிழங்கு, பொடி ஆகியவற்றை தோசை மீது போடுகிறார்.
இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் பலரும், சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே ஹோட்டல்களில் சமையலறை பக்கம் நாம் போகக் கூடாது. போனால் சாப்பிடும் போது சில சமயங்களில் சங்கடம் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இந்த வீடியோவில் தோசைக் கல்லை சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தப்படுவது பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பல்வீர் சிங் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி!
ஹோட்டல்களில் காலங்காலமாக தோசைக் கல்லை துடைப்பத்தை வைத்துதான் சுத்தம் செய்வார்கள். வீடுகளில் இருக்கும் தோசை கல் போன்று அது சிறியது அல்ல. அதன் மீது அதிக அளவு சூடு இருக்கும். மேலும், அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், வேறு ஏதாவது உணவு பொருட்கள் கூட ஒட்டிக் கொண்டிருக்கும். கடைகளில் சாப்பிடும் நாம் அப்படி இருந்தால் சும்மா விடுவோமா? எனவேதான், தோசை ஊற்றுவதற்கு முன்னர் அந்த கல்லை துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்துகிறார்கள். அந்த துடைப்பம் இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் துடைப்பம். அதனை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேசமயம், ஏராளமாக ஊற்றப்படும் நெய், உருளைக்கிழங்கு, பொடி ஆகியவற்றை குறிப்பிட்டு செரிமானம் பற்றி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஹோட்டல்களுக்கு போகும் நபர்கள் மசால் தோசை கேட்டால்தான் இப்படி தருவார்கள். இதுவே செரிமானம் பற்றி கவலை உள்ளவர்கள் சாதா தோசை வாங்கி சாப்பிடலாம். வீட்டில் தோசை மீது தெளிக்கப்படும் நெய்க்கும், ஹோட்டல்களில் நெய் தோசைக்கு தெளிக்கப்படும் நெய்யின் அளவிலும் வித்தியாசம் இருக்கும் என்பதும் உண்மையே. ஆனால், வீடியோவில் இருக்கும் சமையலர் பாக்கெட்டில் இருந்து அப்படியே நெய்யை பீய்ச்சி அடிக்கிறார். அதுதான் சற்று வினோதமாக உள்ளது. ஒருவேளை கரண்டியில் எடுத்து சுமார் 10 கரண்டி நெய்யை விட்டிருந்தால் பெரிதாக தெரிந்திருக்காது.