தடை விதித்த பின்பும் பல அங்கீகரிக்கப்படாத மற்றும் தடைசெய்யப்பட்ட FDC மருந்துகள் சந்தையில் தொடர்ந்து விற்பனையில் உள்ளன.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத மற்றும் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட்-டோஸ் கலவை (எஃப்.டி.சி) மருந்துகளை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் பயனற்றவையாகவே உள்ளன என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான ஆண்டிபயாடிக் கலவை மருந்துகள் அரசு அங்கீகாரம் பெறாதவை அல்லது தடைசெய்யப்பட்டவை என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துப் பொருட்களின் கலவையை உள்ளடக்கிய மருந்துகள் FDC மருந்துகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இந்த வகை மருந்துகள் ஒரு குறிப்பிட்ட மாறாத விகிதத்தில் தயாரிக்கப்படுகின்றன.
undefined
இந்நிலையில், இந்தியாவில் எஃப்.டி.சி. மருந்துகள் பயன்பாடு குறித்து இந்தியா, கத்தார் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஓய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் அறிக்கை, ஜெர்னல் ஆஃப் பார்மசூட்டில் பாலிசி அண்ட் பிராக்டிஸ் (Journal of Pharmaceutical Policy and Practice) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த ஆண்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையில், FDC மருந்துகளின் விற்பனை 2008 இல் 32.9 சதவீதமாக இருந்தது. இது 2020இல் 37.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
சந்தையில் மொத்த ஆண்டிபயாடிக் FDC மருந்து வகைகளின் எண்ணிக்கை 574 (2008) இலிருந்து 395 (2020) ஆகக் குறைந்துள்ளன. இருந்தாலும், இவற்றில் பெரும்பாலானவை அங்கீகாரம் பெறாதவை அல்லது தடைசெய்யப்பட்டவை. அதாவது, 70.4 சதவீதம் (278) மருந்துகள் தடையை மீறி அல்லது அங்கீகாரம் பெறாமலே விற்படை செய்யப்பட்டு வருகின்றன என்று தெரியவந்துள்ளது.
"இந்திய எஃப்.டி.சி பிரச்சனை நன்கு தெரிந்ததே," என்று புது தில்லியில் உள்ள பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்திருக்கும் சுகாதாரப் பொருளாதார நிபுணரும், தாளின் இணை ஆசிரியருமான ஆஷ்னா மேத்தா ThePrint இடம் கூறினார்.
"இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் மருந்துகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், அத்தகைய முயற்சிகளுக்குப் பின்பும், பல அங்கீகரிக்கப்படாத மற்றும் தடைசெய்யப்பட்ட FDC மருந்துகள் சந்தையில் தொடர்ந்து விற்பனையில் உள்ளன" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் சுகாதாரப் பொருளாதார நிபுணருமான ஆஷ்னா மேத்தா சொல்கிறார்.
மேலும், மருந்துச் சந்தையை அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ரூ.430 கோடிக்கு விற்பனையான ரேஸ் கார்... மெர்சிடஸ் பென்ஸ்க்கு சவால் விடும் ஃபெராரி