ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து.. 36 பேர் பலியான சோகம்.. ஜம்மு காஷ்மீர் அருகே அதிர்ச்சி சம்பவம் !!

By Raghupati R  |  First Published Nov 15, 2023, 2:31 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் புதன்கிழமை விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்தனர். 19 பயணிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தோடா மாவட்டத்தில் உள்ள அசார் பகுதியில் புதன்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது.

JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது Batote-Kishtwar தேசிய நெடுஞ்சாலையில் Trungal-Assar அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி கீழே விழுந்தது. மீட்பு பணி தொடங்கப்பட்டு சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “தோடாவில் உள்ள அசார் என்ற இடத்தில் பேருந்து விபத்தில் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. விபத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு டிவ் காம் & மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் கூறினார். தோடா மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது சாலை விபத்து இதுவாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

click me!