சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் 14 நிலவு நாட்களுள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த 14 நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும்? என்பதை இஸ்ரோ தலைவர் விளக்குகிறார்.
புதனன்று சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா ஆனது - விஞ்ஞானிகள் உறைந்த நீரின் முக்கிய இருப்புக்களை வைத்திருக்க முடியும் மற்றும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட தேசத்திற்கான தொழில்நுட்ப வெற்றி என்று விஞ்ஞானிகள் நம்பும் ஒரு வரலாற்றுப் பயணம்.
சந்திரயான்-3 லேண்டர் தொகுதி புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் இந்தியா சரித்திரம் படைத்தது. இந்த வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு இந்தியா என்பது பெருமை கொள்ளத்தக்கது.
இன்று (வியாழக்கிழமை) காலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரை இறங்கியதாக இஸ்ரோ அறிவித்தது. மாலையில் ரோவர் நிலவில் நகரத் தொடங்கி தனது செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறது. இந்த பிரக்ராயன் ரோவர் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 14 நிலவு நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சந்திரனின் மேற்பரப்பில் கனிம வளத்தை ஆராயும் ஸ்பெக்ட்ரோமீட்டர் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆய்வுகளை இந்த 14 நாட்களுள் மேற்கொள்ள வேண்டும். அப்படியானால், இந்த 14 நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
சந்திரயான்-3 திட்டதிதன் ஆயுள் காலம்:
சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் சூரிய சக்தியால் இயங்கக்கூடியவை. ரோவரின் ஆயுட்காலம் சுமார் 14 நிலவு நாட்கள் அல்லது ஒரு பூமி நாள் என்று இஸ்ரோ கூறுகிறது. ரோவரின் செயல்பாட்டுக்கு சூரிய ஒளி முக்கியமானது. ரோவரில் உள்ள சூரிய மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை வைத்துதான் ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் நகரும்.
பூமியைப் போல சந்திரனிலும் இரவு பகல் மாறி மாறி வரும். ஆனால், நிலவில் 14 நாட்கள் இரவும் 14 நாட்கள் பகலும் இருக்கும். நிலவில் சமீபத்திய பகல் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கியது. அதைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய தனம் இஸ்ரோ சந்திரயான்-3 லேண்டரை சரியாக அன்றைய தினம் நிலவில் தரையிறக்கியது.
இன்று முதல் 14 நிலவு நாட்கள் செயல்பாட்டுக்குப் பிறகு, ரோவர் செயல்படத் தேவையான சூரிய ஒளி கிடைக்காமல் போகும். அதாவது, நிலவில் சூரியன் அஸ்தமித்துவிடும். அப்போது நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் (-180° C) அளவுக்குக் குறையும். இவ்வளவு குளிரில் நிலவில் இருக்கும் அனைத்து பொருட்களும் உறைந்துபோய் பயன்படுத்த முடியாததாக ஆகிவிடும்.
Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி
14 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும்?
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யான் இரண்டும் 14 நாட்களுக்குப் பின் முற்றிலும் செயலற்றுப் போய்விடும் என்று சொல்ல முடியாது. இரண்டு வாரம் கழித்து மீண்டும் நிலவின் பகல் நாட்கள் வரும்போது மற்றொரு 14 நாட்கள் லேண்டரையும், ரோவரையும் உயிர்ப்பித்து இயக்க வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
"சூரியன் மறையும் தருணத்தில், எல்லாமே இருளில் மூழ்கிவிடும். வெப்பநிலை மைனஸ்-180 டிகிரி செல்சியஸ் வரை குறையும்; எனவே எந்த கருவியும் செயல்படுவது சாத்தியமில்லை. மீண்டும் பகல் வரும்போது இன்னும் செயல்படும் நிலையில் இருக்கும் பட்சத்தில், அது மீண்டும் உயிர்பெற்று, வேலை செய்ய வைக்க முடியும். அதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம்..." என இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவிக்கிறார்.
பூமிக்குத் திரும்புமா?
சந்திரயான்-3 மீண்டும் பூமிக்குத் திரும்புமா? என்ற கேள்விக்கும் பதில் கூறிய சோமநாத், அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவை நிலவிலேயே இருக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன் இஸ்ரோ செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலம் நிர்ணயிக்கப்பட்டதற்கும் மேலாக அதிக நாட்கள் செயல்பாட்டில் இருந்தது. அதுபோல சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் அதிக நாட்கள் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
சந்திரயான்-3 வெற்றி... இஸ்ரோ தலைவரைச் சந்தித்து பாராட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!