சந்திரயான்-3 வெற்றிக்குப் பின் ஆதித்யா L1! சூரியனை நோக்கி அடுத்த டார்கெட்! இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம்

By SG Balan  |  First Published Aug 24, 2023, 5:19 PM IST

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 செப்டம்பரில் ஏவுவதற்குத் தயாராகி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறியுள்ளார்.


சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியது பற்றி பேசியுள்ள இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத், "மனதில் என்ன நடந்தது என்பதை விவரிப்பது மிகவும் கடினம்" என்று கூறியுள்ளார். சாதனைக்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் தென் துருவப் பகுதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து பேசிய அவர், "கிட்டத்தட்ட 70 டிகிரி தென் துருவத்திற்கு அருகில் சென்றுவிட்டோம். தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நன்மை உள்ளது. அதிக அறிவியல் ஆய்வுக்கான சாத்தியம் இருக்கிறது... இதனால் நிலவில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தென் துருவத்தில் அதிக ஆர்வம் காட்டினர். ஏனெனில் இறுதியில் மனிதர்கள் சென்று காலனிகளை உருவாக்கி அதற்கு அப்பால் பயணிக்க விரும்புகிறார்கள். நிலவின் தென் துருவம் அதற்கு சிறந்த இடமாகவும் இருக்க சாத்தியம் உள்ளது" என்றார்.

Tap to resize

Latest Videos

நிம்மதியா வாழ விடுங்க... விமான நிலையத்தில் அஜித்துக்கு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு வசமான டோஸ்!

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் மென்மையாகத் தரையிறங்கிய பிறகு இஸ்ரோவின் திட்டம் பற்றியும் கூறிய அவர், "பிரக்யான் ரோவரில் இரண்டு கருவிகள் உள்ளன, இவை இரண்டும் சந்திரனில் உள்ள கனிம வளம் மற்றும் ரசாயன வளம் பற்றி ஆய்வு செய்யக்கூடியவை. இது எதிர்காலத்தில் நிலவின் மேற்பரப்பில் உலாவச் செய்வதற்கான ரோபோ பற்றி திட்டமிடவும் உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

சந்திரயான்-3க்குப் பின் இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்தும் சோமநாத் விவரித்தார். "சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 செப்டம்பரில் ஏவுவதற்குத் தயாராகி வருகிறது. ககன்யான் இன்னும் செயலில் உள்ளது. 2025ஆம் ஆண்டு நாம் முதல் மனிதரை விண்வெளிக்கு அனுப்ப வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன் பல்வேறு சோதனைகள் மெற்கொள்ளப்பட இருக்கின்றன. செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதிக்குள் அதற்கான ஒரு சோதனையைச் செய்வோம்" என்று தெரிவித்தார்.

Redmi A2+ மொபைலின் புதிய 128 GB மாடல் வந்தாச்சு! விலையைக் கேட்டா ஆச்சரியமா இருக்கும்!

சந்திரயான்-3 லேண்டர் தொகுதி புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் இந்தியா சரித்திரம் படைத்தது. இந்த வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு இந்தியா என்பது பெருமை கொள்ளத்தக்கது.

15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இஸ்ரோவுடன் இணைந்து நிலவில் தரையிறங்கும் காட்சியைப் பார்வையிட்டார். "நாம் புதிய இந்தியாவின் சாட்சியாக இருக்கிறோம். புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இது என்றென்றும் போற்ற வேண்டிய தருணம். இந்தியா இப்போது நிலவில் உள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.

"ஒரு காலத்தில் நிலா தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இனி நம் குழந்தைகள், நிலா ஒரு முறை டூர் சென்றுவரும் தூரத்தில் தான் உள்ளது என்று கூறும் நாளும் வரும்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி

click me!