சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படம்!

Published : Aug 18, 2023, 07:09 PM IST
சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படம்!

சுருக்கம்

சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் விக்ரம் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 தேதியன்று சந்திரயானின் லேண்டர் கலனை மென்மையாக  தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது புவி நீள் வட்ட சுற்றுப்பாதையை பயணத்தை முடித்து நிலவின் சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டர் மூலம் ஆகஸ்ட் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும், நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கான இடத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

 

இதுகுறித்து, “சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. அடுத்து, வேகம் குறைக்கும் நடவடிக்கை நாளை மறுநாள் நடைபெறும்.” என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tickets Offers : விமான பயணிகளுக்கு டிக்கெட் சலுகை.. இவ்வளவு குறைந்த விலைக்கா.? முழு விபரம் இதோ !!

சந்திரயான்-3 விண்கலத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி மென்மையாக தரையிறக்க திட்ட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. முதலில் லேண்டர் தரைம் இறக்கியதும் அதிலிருந்து இறங்கும் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!