செல்லப்பிராணிகளால் ஏற்பட்ட பிரச்சனை.. பால்கனியில் நின்று கண்மூடித்தனமாக சுட்ட நபர் - இந்தூரில் இருவர் பலி!

By Ansgar R  |  First Published Aug 18, 2023, 2:53 PM IST

இந்தூரில் கடந்த வியாழன் அன்று வளர்ப்பு நாய்கள் குறித்து, அதன் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இரண்டு பேரின் மரணத்தில் சென்று முடிந்ததுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். வங்கி ஒன்றில் பாதுகாவலராகப் பணிபுரியும் ராஜ்பால் சிங் ரஜாவத் நேற்று இரவு தனது பால்கனியில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


என்ன நடந்தது?

ரஜாவத் மற்றும் அவரது அண்டை வீட்டாரான விமல் அச்சலா (35 வயது) ஆகியோர் இரவு 11 மணியளவில் கிருஷ்ணா பாக் காலனியில் உள்ள ஒரு குறுகிய பாதையில் தங்கள் நாய்களை நடைபயிற்சி கூட்டிசென்றுள்ளனர். அப்போது இரண்டு நாய்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

விரைவில், அந்த நாய்களின் உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜாவத் என்ற அந்த நபர் உடனே முதல் மாடியில் உள்ள தனது வீட்டிற்கு ஓடிச்சென்று, அவரிடம் இருந்த 12-Bore ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி, அவரது பால்கனியில் நின்று கொண்டே கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். 

கொடூரமான இந்த துப்பாக்கிச் சூட்டின் வீடியோவில், ரஜாவத் தனது ஆயுதத்தை கீழே உள்ள தெருவில் உள்ளவர்களை நோக்கி சுடுவதற்கு முன்பாக மேல்நோக்கி ஒருமுறை சுடுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டவுடனே மக்கள் அலறியடித்து ஓடியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு பட்டியலின மாணவன் வீடு புகுந்து தாக்குல்

அந்த நகரின் நிபானியா என்ற பகுதியில் சலூன் நடத்தி வந்த அச்சலா, மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான 27 வயதான ராகுல் வர்மாவுடன் இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டை மூண்டபோது தெருவில் இருந்த மேலும் 6 பேருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ரஜாவத், அவரது மகன் சுதிர் மற்றும் மற்றொரு உறவினரான சுபம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குவாலியரைச் சேர்ந்த ரஜாவத், உரிமம் பெற்ற 12-Bore துப்பாக்கி வைத்திருந்ததால், இந்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தால் அவர் காவலாளியாக பணியமர்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

“எனது மனைவி தற்கொலை செய்துகொள்வார்” நூதன காரணங்களை கூறி அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏக்கள்

click me!