
ஜி20 இந்திய தலைமையின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது, வங்கதேசம், தென் கொரியா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் துறை சார்ந்த அமைச்சர்கள், மூத்த பிரதிநிதிகளுடம்ன் இரு தரப்பு பேச்சுவார்த்தையை அவர் மேற்கொண்டார்.
தென் கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜின் பே ஹாங்கை சந்தித்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே உள்ள பரந்த தொழில்நுட்பம் குறித்து குறிப்பாக, மின்னணுவியல் துறையில் உள்ள ஆழமான உறவைப் பற்றியும் விவாதித்தார். மேலும், இந்த கூட்டாணியின் வளர்ச்சி உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
துருக்கி நாட்டின் தொழில்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மெக்மெட் ஃபட்டிஹ் காஜிரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை சில நாடுகளாலும், நிறுவனங்களாலும் வடிவமைக்க முடியாது; அவை மேலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வளர்ந்த இந்தியா..' 2047க்குள் கனவை நனவாக்குவோம்.. பிரதமர் மோடி வெளியிட்ட புள்ளி விவரக்கணக்கு !!
டிஜிட்டல் விவகாரங்களுக்கான பிரான்ஸ் நாட்டின் அமைச்சரை சந்தித்த அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி மக்கள் மத்தியில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி விவாதித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவில் புதிய இந்தியாவின் அதிகமாக முதலீடுகள் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தை டிஜிட்டல் மயமாக்க விரும்பும் நாடுகளுக்கு பிரான்ஸ், இந்தியா போன்ற ஒத்த சிந்தனையுள்ள நாடுகளால் உதவ முடியும் எனவும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
தெற்காசியாவில் வங்கதேசத்திற்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் குறித்து அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர ஜுனைத் அகமது உடன் பேசிய ராஜீவ் சந்திரசேகர், சைபர் பாதுகாப்புகள் குறித்தும் விவாதித்தார். முன்னதாக, டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுவின் நான்காவது கூட்டத்திற்கு இடையே, இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 டிஜிட்டல் கண்டுபிடிப்பு கூட்டணி உச்சி மாநாட்டை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.