நாளை விண்ணில் பாயும் சந்திரயான் 3! எல்.வி.எம். 3 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்

By SG Balan  |  First Published Jul 13, 2023, 9:03 AM IST

சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம். 3 ராக்கெட்டின் 25 1/2 மணிநேர கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் தொடங்குகிறது.


சந்திரயான் 3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படுவதை முன்னிட்டு 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் எல்லா பகுதிகளும் முழுமையாக பொருத்தப்பட்டுவிட்டன. பின்னர் அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டமும் முடிந்து, எரிபொருள் நிரப்பும் கட்டத்தை எட்டியுள்ளது. விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற இயந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

உடனடியாக வெளியேறுங்கள்! தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் 'புரபுல்சன்' என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இது விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு செல்லக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்டர் பகுதி தான் நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் பகுதி. இந்த மூன்று முக்கிய பகுதிகளுக்கு இடையே ரேடியோ அலைவரிசை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25½ மணிநேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது. கவுண்ட்டவுன் முடிந்ததும் சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிய எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் விண்ணில் பாயும்.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (நாளை) பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாயும்.

'சந்திரயான்-3' மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

சந்திரயான் 3 விண்ணில் பாயும்போது நேரில் பார்க்கணுமா?

click me!