சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் இறங்கும் பிரக்யான் ரோவர் 14 நிலவு நாட்கள் (ஒரு புவி நாள் ஆயுள்) நிலவில் ஆய்வுகளைச் செய்யும்.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் லேண்டர் 'மென்மையான தரையிறக்கத்தை' நிறைவேற்றிய சாதனையைச் செய்த ஒரே நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இனி, நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும் சிறிய வாகனமான பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து வெளிவரவுள்ளது. இது நடப்பதற்கு சில மணிநேரங்கள் ஆகலாம். இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அதிகபட்சம் ஒரு நாள் கூட ஆகக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
undefined
செயற்கைகோள் கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் விண்கலத்திலிருந்து பிரிந்த திட்டமிட்டபடி மாலை 6:04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
https://t.co/c5EFhctHi7
மண் மழை
தரையிறங்கும்போது நிலவின் மேற்பகுதியில் உள்ள தூசி படலம் ஏற்பட்டிருக்கும் என்பதால் அது அடங்கும் வரை பிரக்யானை வெளியே இறக்க லேண்டர் காத்திருக்க வேண்டும். நிலவில் காற்று இருக்காது என்பதால் லேண்டர் தரையில் விழுந்தபோது மேலெழுந்த தூசி கீழே வர சிலமணிநேரம் ஆகும். தூசி கீழே மெதுவாக விழும் காட்சி மண் மழை போல இருக்கும் என்றும் இந்த மண் மழை முடிய சுமார் 3 மணிநேரம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண் படலம் அடங்கியதும் லேண்டரில் உள்ள கதவு திறக்கப்படும். அதற்குள் இருந்து தரை வரை நீளும் சரிவான பாதையில் ஆறு சக்கரங்கள் கொண்ட சிறிய வாகனமான பிரக்யான் ரோவர் மெல்ல இறங்கி வந்து நிலவின் தரையை அடையும்.
இறங்கியதும் பிரக்யான் ரோவர் தன்னைத் தாங்கி வந்த விக்ரம் லேண்டரை படம் பிடிக்கும். அதேபோல லேண்டரும் தான் நிலவில் தரையிறக்கிய ரோவரை படம் பிடிக்கும். இந்தியா நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியற்கு சாட்சியாக அமையப்போவது இந்த இரண்டு படங்கள்தான்.
விக்ரம் லேண்டர் - பிரக்யான் ரோவர் ஆய்வுகள்:
இதுவரை நிலவின் தென் துருவப் பகுதிகள் ஆராயப்படாமல் உள்ள நிலையில், சந்திரயான்-3 அந்தப் பகுதியில் பல்வேறு ஆய்வுகளைச் செய்ய உள்ளது.
விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானில் உள்ள ஆறு பேலோடுகள் முந்தைய சந்திரயான்-2 இல் உள்ளது போலவே உள்ளன. நிலவு நடுக்கங்கள், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை, மேற்பரப்புக்கு அருகிலுள்ள பிளாஸ்மாவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை துல்லியமாக அளவிட உதவும் சோதனை ஆகியவற்றை மேற்கொள்ள நான்கு அறிவியல் கருவிகள் லேண்டரில் உள்ளன. நான்காவது பேலோடு நாசாவில் இருந்து அளிக்கப்பட்டது ஆகும்.
ரோவரில் இரண்டு பேலோடுகள் உள்ளன. அவை சந்திர மேற்பரப்பின் ரசாயன மற்றும் கனிம கலவையை ஆய்வு செய்வதற்கும், சந்திர மண் மற்றும் பாறைகளில் உள்ள மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களின் கலவையை ஆய்வு செய்வதற்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.