இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியவுடன் காணொளிக் காட்சி மூலம் இணைந்திருந்த பிரதமர் மோடியுடன் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை அறிவித்தார். "நிலவில் மென்மையான தரையிறக்கத்தை செய்து சாதித்துவிட்டோம்" என்று கூறிய அவர், பிரதமர் மோடி விஞ்ஞானிகளை வாழ்த்திப் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
| ISRO chief S Somanath congratulates his team on the success of the mission pic.twitter.com/0MVDV26V2x
— DD News (@DDNewslive)இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் பிரக்யான் ரோவர் நிலவில் இறங்க உள்ளது. ஆறு சக்கரங்கள் கொண்ட ஊர்தியான பிரக்யான் ரோவர் 14 நிலவு நாட்கள் அல்லது ஒரு புவி நாள் ஆயுள் கொண்டிருக்கும். இதற்குள் பிரக்ராயன் ரோவரும் லேண்டரும் இணைந்து நிலவில் 7 ஆய்வுகளைச் செய்ய உள்ளன.
நிலவின் தட்பவெப்பநிலை, பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போல நிலவில் நடக்கும் நிலவு நடுக்கம், நிலவில் உள்ள கனிம வளங்கள் ஆகியவை பற்றி விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. தரையிறங்கும் போது 22 நிமிடங்கள் அந்தரங்கத்தில் அசையாமல் இருந்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
சந்திரயான்-3 லைவ் வீடியோவிலும் புதிய மைல்கல்! ஸ்பெயினின் 3.4 மில்லியன் சாதனை முறியடிப்பு!
We are on the moon! makes soft landing on our planet’s satellite.
Here’s a beautiful sketch to depict how Mother Earth ties a Rakhi to our ChandaMama.
What a way to celebrate! 🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/lN5C45lfNL
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய காட்சியை தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பார்வையிட்டுவந்த பிரதமர் மோடி, இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும் புதிய இந்தியா உருவாகியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது பல நாடுகள் நிலவில் ஆய்வு செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சந்திரயான்-3 தரையிறங்குவதை ஆவலுடன் எதிர்நோக்கி நிலையில், இந்த வெற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரின் உழைப்புக்கும் கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.