Gujarat : குஜராத்தில் கடந்த ஜூலை 10ம் தேதி முதல் "சண்டிபுரா வைரஸால்" 6 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு வார இடைவெளிக்குள் ஏற்கனவே 6 குழந்தைகள் இறந்துள்ள நிலையில், மேலும் 12 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த "12 நோயாளிகளின் மாதிரிகளில், குறிப்பிட்ட அந்த நோயின் தாக்கம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டுள்ளன," என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறினார்.
"சண்டிபுரா வைரஸ்", கொசுக்கள், உண்ணிகள் மற்றும் மணல் ஈக்கள் போன்ற பூச்சிகளால் பரப்பப்படும் நோய்க்கிருமிகளால் பரவுகிறது. மேலும் இந்த நோய்க்கிருமி, "ராப்டோவிரிடே" குடும்பத்தின் வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளை இது எளிதில் பாதிக்கக்கூடியதாகவும்.
undefined
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு.. 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்..
குழந்தைகளுக்கு எப்படி பரவுகிறது?
பொதுவாகவே குழந்தைகள் பொதுவெளியில் விளையாடும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளார்கள். ஆகவே, அசுத்தமற்ற இடங்களில் உள்ள கொசு மற்றும் பிற பூச்சிகளால் தான் இந்த நோய்கள் அதிக அளவில் குழந்தைகளுக்கு உண்டாகிறது.
இப்பொது பாதிக்கப்பட்டுள்ள 12 நோயாளிகளில், நான்கு பேர் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் ஆரவல்லி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குஜராத்தில் உள்ள மஹிசாகர் மற்றும் கெடாவிலிருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த நோய் தொற்றுநோயல்ல என்றும், ஆனாலும் அஜாக்கிரதையாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.
நோயின் அறிகுறி என்ன?
சண்டிபுரா வைரஸ், சாதாரண காய்ச்சலுக்கு உள்ள அறிகுறிகளுடன் தான் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் அடுத்தகட்டமாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது பெரிய அளவிலான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
ஹிமத்நகர் சிவில் மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவர்கள், கடந்த ஜூலை 10ம் தேதி அன்று, நான்கு குழந்தைகளின் மரணத்திற்கு "சண்டிபுரா வைரஸ்" காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். உடனே அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை NIVக்கு அனுப்பினர். பின்னர் தான் மருத்துவமனையில் இருந்த மேலும் நான்கு குழந்தைகளுக்கும், அதே அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.
மக்களை காக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.