மேடையில் திடீரென சரிந்து விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Published : Dec 07, 2018, 03:20 PM IST
மேடையில் திடீரென சரிந்து விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

சுருக்கம்

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மேடையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மேடையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார் கட்கரி. அப்போது திடீரென்று அவர் மயங்கி சரிந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை, தாங்கி பிடித்துக்கொண்டனர்.

இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!