என்னது தேஜஸ் ரயிலில் இவ்வளவு கட்டணமா ? தெறித்து ஓடும் பயணிகள் !!

Published : Dec 07, 2018, 07:10 AM IST
என்னது தேஜஸ் ரயிலில் இவ்வளவு கட்டணமா ? தெறித்து ஓடும் பயணிகள் !!

சுருக்கம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவற்றில் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதாக தொடங்கவுள்ள தேஜஸ் ரயிலில் கிட்டத்தட்ட விமான கட்டணம் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் என்ற அதிவேக புதிய ரெயில், வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், பிற்பகல் 1 மணிக்கு மதுரை சென்றடையும்.

 

அதாவது பயண நேரம் வெறும் 7 மணி நேரம் மட்டுமே. அதேபோல் மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில், இரவு 9.35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 

இந்த தேஜஸ் ரெயிலில், சேர் கார் கட்டணம் 1,140 ரூபாயில் இருந்து ஆயிரத்து 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறப்பு வகுப்புக்கான ரெயில் பெட்டி கட்டணம் 2,135 ரூபாயில் இருந்து 2,200 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில், விழுப்புரம், திருச்சி ஆகிய இரு ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2500 உள்ள நிலையில் கிட்டத்தட்ட விமான கட்டணம் தேஜஸ் ரயிலில் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!