நாடாளுமன்ற தேர்தல்... பாஜக வேட்பாளராகிறார் பிரபல நடிகை!

Published : Dec 07, 2018, 10:47 AM IST
நாடாளுமன்ற தேர்தல்... பாஜக வேட்பாளராகிறார் பிரபல நடிகை!

சுருக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தி நடிகை மாதுரி தீர்ட்சித் பாஜக வேட்பாளராக களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தி நடிகை மாதுரி தீர்ட்சித் பாஜக வேட்பாளராக களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வரும் 2019ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே நாடாளுமன்ற தொகுதியில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், பா.ஜ.க சார்பில் களமிறக்க, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேசாப், சாஜன், ஹம் ஆப்கே கெயின் கோன் போன்ற ஹிந்தி படங்களில் நடித்து, பிரபலமானவர் மாதுரி தீட்சித். இந்தி படத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது, அந்த தொகுதியின் எம்பியாக, பாஜகவை சேர்ந்த, அனில் ஷிரோல் உள்ளார்.

 

இதுகுறித்து, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூறுகையில், மும்பையில், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்திய, வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், அவரிடம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கோரினார்.

அதே நேரத்தில் அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி தற்போது, முழு வீச்சில் நடக்கிறது. இந்த பட்டியலில், புனே தொகுதியில் போட்டியிட, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில், அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

PREV
click me!

Recommended Stories

Tirupati Darshan: அபிஷேக சேவை நேரத்திலும் தரிசனம் செய்யலாம்.. திருமலை திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்
Lost Luggage: ரயில்ல பை, போனை விட்டுட்டீங்களா? இந்த ஒரு நம்பருக்கு கால் பண்ணா போதும்!