தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா... தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!

By Narendran SFirst Published Mar 16, 2023, 7:33 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மராட்டிய அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம்: உயிரிழந்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பிய தி.க.வினர்

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக மாநில முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 2,882 ஆக இருந்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதி முடிவில் 3,264 ஆக அதிகரித்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும்  மார்ச் 8 ஆம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 170 ஆக இருந்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதி முடிவில் 258 ஆக அதிகரித்துள்ளது. தொற்று விகிதம் 1.99% ஆக உள்ளது. இந்தியா முழுவதும் சராசரி தொற்று விகிதம் 0.64 ஆக உள்ளது.

இதையும் படிங்க: நாகையில் காப்பக சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காப்பக நிறுவனர் கைது

மாநில அரசு இதனை மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும் கொரோனா அதிகரிக்காமல் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகள், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!