ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்தை மீட்டெடுக்க எதிர்கட்சிகள் கூட்டம்… தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு!!

By Narendran SFirst Published Mar 16, 2023, 6:40 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர், காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர், காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். ஜம்மு & காஷ்மீரில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்கவும், மக்களின் உரிமைகள் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கவும், தேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் கூட்டம் நடத்தினர். இதில் இந்த கூட்டத்தில் தேசிய மாநாட்டு தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, என்சிபி தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிபிஐ, ஆர்ஜேடி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 

அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த கோரி தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை என்ற பிரச்சனையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். தேசிய மாநாடு மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒரு குழுவும் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்தது என்று தெரிவித்துள்ளார். 

click me!